திரு. அனுராத பெரேரா அவர்கள் வெலிபல் லெஷர் (பிரைவட்) லிமிடட் பணிப்பாளர்களில் ஒருவராகவும், வெலிபல் குழுமத்தின் கீழியங்கும் ஏனைய தனியார்துறை நிறுவனங்களில் பணிப்பாளர் பதவிகளையும் வகிக்கிறார்.
ஐக்கிய இராச்சியத்தின் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் அங்கத்தவர் மற்றும் ஒரு பட்டய சந்தைப்படுத்துனர். அத்துடன் ரன்கமுவ அவர்கள் அவுஸ்திரேலியாவின் முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் அங்கத்தவர்களில் ஒருவரும் ஆவார்.
அத்துடன் அவர் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தின் அங்கத்துவத்தைக் கொண்டிருப்பதோடு யுனிடெக் (நியூசிலாந்து) நிறுவனத்தின் அடிப்படைக் கற்கைகள் (விளையாட்டு) சான்றிதழையும் கொண்டுள்ளார். அவர் தென் குவின்ஸ்லேன்ட் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவம் (முதுமானி) பட்டதாரியும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் நிதி முகாமைத்துவம் தொடர்பான பட்டப் பின்கற்கை டிப்ளோமாதாரியும் ஆவார்.
அவர் தனது தொழில் வாழ்க்கையை சிறிது காலம் அர்னஸ்ட் அன்ட் யங் இலும் பின்னர் சென்ட்ரல் பினான்ஸ் பிஎல்சி இலும் ஆரம்பித்தார். பின்பு அவர் மர்கன்டைல் இன்வெஸ்ட்மன்ட் பிஎல்சி உடன் இணைந்ததோடு அங்கிருந்த நீண்ட காலப்பகுதியில் பணிப்பாளர் பதவி வரையில் வௌ;வேறு முக்கிய பதிவிகளை வகித்தார். 2007 ஆம் ஆண்டில் ரன்கமுவ அவர்கள் வெலிபல் பினான்ஸ் உடன் இணைந்து கொண்டார். இலங்கை குத்தகை சபையின் தலைவர் பதவியையும் வகித்துள்ளார்.
அவர் பான் ஏஷியா வங்கியின் தலைவராகவும் அவ்வாறே ஹூன்னஸ் போல்ஸ் பிஎல்சி மற்றும் பினான்ஸ் ஹவுஸ் கொன்சோர்டியம் (பிரை) நிறுவனங்களின் பணிப்பாளராகவம் சேவையாற்றி வருகின்றார்.
சிசிர சிரிமெவன் வீரபாஹூ அவர்கள் அரச மற்றும் தனியார் துறை சிரேஷ்ட பணிப்பாளர் பதவிகளில் 35 வருடகால அனுபவம் கொண்டவர். கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வியைப் பெற்று பின் மொறட்டுவை பல்கலைக்கழத்திற்கு பிரவேசித்து அவர் கட்டுமானப் பொறியியில் விஞ்ஞான இளமானி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். வீரபாஹூ அவர்கள் இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தின் அங்கத்தவராக இருப்பதோடு, ஐக்கிய இராச்சியத்தின் முகாமைத்துவக் கணக்காளர் பட்டய நிறுவனத்தின் அங்கத்தவராகவும் உள்ளார். அவ்வாறே ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப் பின்கற்கை நிறுவகத்தின் வணிக நிர்வாக முதுமானி பட்டதாரியாக இருப்பதாடு, நிதி முகாமைத்துவம் தொடர்பாக சர்வதேச பயிற்சியையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
அவர் இலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் லங்கா செலூலர் சேர்விஸஸ் ஆகியவற்றின் தலைமை நிதி அதிகாரியாக 14 வருடங்களுக்கு அதிக காலம் சேவையாற்றி இருப்பதோடு, உலக வங்கியின் வதிவிட நடவடிக்கை வேலைத்திட்டத்தில் தேசிய உட்கட்டமைப்பு பிரிவில் ஆலோசகர் ஒருவராக 02 வருட காலம் சேவையாற்றி உள்ளார். அதன் பின்னர் மில்லெனியம் நிறுவனக் குழுமத்துடன் இணைந்துகொண்ட அவர் அங்கு மில்லெனியம் ஹவுசிங் டிவலப்பர்ஸ் பிஎல்சி, எம் சி அர்பன் டிவலப்பர்ஸ் லிமிடட், மில்லெனியம் ஹவுசிங் லிமிடட், எம்சி யுனிவர்சல் லிமிடட், மில்லெனியம் வில்லா ஹவுசிங் லிமிடட் நிறுவனங்களின் பணிப்பாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரியாக 19 வருட காலம் ஓய்வுபெறும் வரை கடமையாற்றினார்.
அவர் செயற்திட்ட அபிவிருத்தி, செயற்திட்ட நிதியாக்கம், பொது முகாமைத்துவம், நிதி மற்றும் பொறியில் போன்ற பிரிவுகளில் தேர்ந்த அனுபவம் மிக்கவர் ஒருவர் ஆவார்.
ஜனக குமாரசிங்க அவர்கள் மனிதவள முகாமைத்துவம் தொடர்பான சிரேஷ்ட நிபுணராக இருப்பதோடு, ரெக்னிஸ் லங்கா, சிங்கர் ஸ்ரீ லங்கா, சன்டெல் மற்றும் IUCN பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நிறுவனங்களில் சிரேஷ்ட மனிதவள முகாமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். இலங்கை ஆட்கள் முகாமைத்துவம் தொடர்பான பட்டய நிறுவகத்தின் (CIPM) அங்கத்தவரான ஜனக அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமது வணிக இளமானி பட்டத்தைப் பெற்றுக்கொண்டதோடு, முதுமானி பட்டத்தை (ஆசிய – பசுபிக் மனிதவள முகாமைத்துவம்) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான அவர் CMA (அவுஸ்திரேலியா) அங்கத்தவரும் ஆவார்.
CIPM இலங்கை மற்றும் மனிதவள முகாமைத்துவ ஆசிய – பசுபிக் சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக இலங்கைக்கு PQHRM (மனித வள முகாமைத்துவம் தொடர்பான தொழிற்திறன் தகைமை) இனை அறிமுகம் செய்வதற்கு முன்னோடியாக செயற்பட்டதோடு, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, இலங்கைக்கு வெளியக செயற்பாட்டு (Outward Bound Training) கருத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்காக செயற்பட்ட பயிற்சியளிப்புக் குழுவின் ஆரம்ப அங்கத்தவராகவும் கடமையாற்றினார்.
மொறட்டுவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக முதுமானி கற்கைநெறிகளின் மனிதவள முகாமைத்துவம் தொடர்பான வருகை தரும் பேராசிரியரான ஜனக அவர்கள் மனிதவள துறைக்கு மேற்கொண்ட சிறந்த பங்களிப்புக்காக 2009 ஆம் ஆண்டில் இலங்கை ஆட்கள் முகாமைத்துவம் தொடர்பான பட்டய நிறுவகத்தின் (CIPM) தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
குமாரசிங்க அவர்கள் தற்பொழுது தெற்காசியாவின் மனிதவள முகாமைத்துவ இதழின் சர்வதேச ஆலோசகர் சபையின் அங்கத்தவராகவும், முன்னணி ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தின் வளப் பங்களிப்பு (செயற்திட்டம்) பணிப்பாளராகவும், அவரது சொந்த நிறுவனமான கென்ட் ரிஜ் (பிரை) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் சேவையாற்றுகிறார்.
திரு. கபில தொடம்கொட சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவகத்தின் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கான பிராந்திய பணிப்பாளர் (ICMA-ANZ) மற்றும் அக்கடமி ஒஃப் பைனான்ஸ் (பிரைவட்) லிமிடடட் இனது ஸ்தாபகர் / முகாமைத்துவப் பணிப்பாளர் ஆவார். அக்கடமி ஒஃப் பைனான்ஸ் இவரது தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் ICMA-ANZ பிணைகள் மற்றும் முதலீடுகளுக்கான பட்டய நிறுவனம் (CISI-UK), உள்ளக கணக்காளர்களுக்கான நிறுவனம் (IIA-USA), மற்றும் ஆசிய இ-பல்கலைக்கழக கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்களை என்பவற்றை ஆரம்பித்து முன்னெடுத்தது. அத்துடன் தேசிய பொறியியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (NERD) பணிப்பாளராக 2020 முதல் 2022 வரை சேவையாற்றி உள்ளார்.
திரு. தொடம்கொட கொழும்பு பல்கலைக் கழகத்தின் பொருளாதார முதுமானிப் பட்டம் மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்புகள் இயந்திரவியலில் இளமானிப் பட்டத்தையும் கொண்டுள்ளார். அவர் ICMA-ANZ மற்றும் பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனத்தின் அங்கத்தவர் ஆவார். அவர் CISI-UK, பட்டய சந்தைப்படுத்தல் நிறுவகம் (CIM-UK), இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம், மற்றும் பொறியியலாளர் நிறுவகம் (இலங்கை) என்பவற்றின் அங்கத்தவரும் ஆவார். அவர் பல்வேறு தொழில்வாண்மை கணக்கீடு மற்றும் நிதியியல் அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் கூட்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு முக்கியமான வளவாளராக இருந்து வருகின்றார்.
Ranjith Dahanayake, a distinguished legal professional, brings over four decades of experience to his role as a Board Director. Graduating from Sri Lanka Law College in 1981, Ranjith began his legal career as an Attorney-at-law in 1982, practicing under senior lawyers at Mount Lavinia Magistrate's Court. His early exposure to a wide array of cases provided a solid foundation for his specialization in both criminal and civil law.
In his extensive private practice, Ranjith has made significant contributions to the legal field. He has successfully represented numerous high profile clients in complex cases. Ranjith is also a dedicated mentor, having guided and developed the careers of 15 junior lawyers. His mentorship has helped shape the next generation of legal professionals, ensuring the continuation of high standards in the practice of law.
A member of the Mount Lavinia Bar Association since 1982, he has held various leadership positions there including that of Vice President. Additionally, his status as a life time member of the Sri Lanka Bar Association underscores his long-term commitment to the legal profession. In 1996 he began serving, and continues to serve as an unofficial Magistrate in Mount Lavinia Magistrates Court. In 2018, Ranjith expanded his professional endeavors by joining the Board of Sathosa Motors PLC as an Independent Director.
ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ
© for Vallibel Finance by: 230 interactive